திராவிடக் கட்சிகளைக் கலைக்கச் சரியான நேரம்
தமிழ்நாட்டில் உள்ள மொழி அடிப்படையிலான திராவிடக் கட்சிகளைக் கலைக்க இதுவே சரியான நேரம். பொதுவாகவே, திராவிடக் கட்சிகள் தமிழ் மக்களின் நலனுக்காக எதையும் செய்துவிடவில்லை, அதேசமயம், அவை போதுமான அளவு சேதங்களைச் செய்துள்ளன. தமிழ் மக்கள் ஏதேனும் ஒரு தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினால், அசிங்கமான உள்ளூர் அரசியலிலிருந்து விலகினால் நன்மை அடைவார்கள். மாநிலத்தின் சூழல் இப்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் உள்ளது. ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து, நல்ல தலைமை இல்லாத சூழ்நிலை மாநிலத்தில் நன்கு தெரிகிறது. ஆளுங்கட்சி கரைந்து காணாமல் போவதற்கு இன்னும் சில காலமே போதும். கருணாநிதி மறைந்தால், நிலை இன்னும் மோசமாகும்!!
ஆகவே, கருணாநிதி இப்போதே தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள திராவிடக் கட்சியைக் கலைக்கும் பணியைத் தொடங்கி, ஏதேனும் ஒரு தேசியக் கட்சியில் இணைந்தால், அவருடைய வாழ்க்கையின் மிக நல்ல, மிகச் சிறந்த செயலாக அது இருக்கும். மாநிலத்தின் நலனுக்காக அவர் செய்த பணியாகவும் அது அமையும்.